தீவுத்திடலில் சென்னை விழா : எப்போது?

தமிழகம்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் வருகிற 29ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை சென்னை விழா நடக்கிறது. 

காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை இடம் பெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள். ரூ.1.50 கோடி செலவில் மிக பிரமாண்டமாக இந்த சென்னை விழா நடத்தப்படுகிறது. 

இந்த விழா தொடர்பாக பேசியுள்ள சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, “சென்னை விழாவில் நடைபெறும் கண்காட்சியில் வங்கதேசம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா,

தென் ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவார்கள். 

இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் வைத்திருப்பார்கள். தமிழகத்தில் இருந்து 70 ஸ்டால்களும் இடம் பெறுகின்றன.

தமிழகத்தில் புவியியல் குறியீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப் படுத்தப்படும். சில தயாரிப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது தொடர்பாகவும் கண்காட்சியில் செய்து காட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

திருமண மண்டபங்களில் மதுபானம்: சிறப்பு உரிமம் ரத்து!

“எடப்பாடி கம்பெனிக்குள் அதிமுக இருக்கக்கூடாது”: ஓபிஎஸ்

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *