சென்னை – தாம்பரம் இடையிலான இரவு நேர ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 100க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மட்டும் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் கடந்த சில தினங்களாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, மாம்பலம், கிண்டி, எழும்பூர், பார்க் என பல ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருந்ததையும், ரயில் சேவை ரத்தானதால் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததையும் காண முடிந்தது.
இந்தச்சூழலில் இரவு நேர பராமரிப்பு காரணமாக முக்கிய அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் தாம்பரம் யார்டில் 2023 அக்டோபர் 3 முதல் 17 வரை பொறியியல் வேலைகள் நடைபெற இருப்பதால் இரவு நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் 11.59 மணி ரயில் சேவையும்,
தாம்பரம் – சென்னை கடற்கரை நோக்கி செல்லும் 11.40 மணி ரயில் சேவையும் அக்டோபர் 3ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் 11.35 மணி ரயில் அக்டோபர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இயக்குனர் டூ தயாரிப்பாளர்” ராஜூ முருகன் அடுத்த படம்!
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!