சென்னை தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு வரை மேம்பால பணிகள் நடைபெற உள்ளது.
மேம்பால கட்டுமான பணி காரணமாக சென்னை தியாகராய நகரில் இன்று (ஜனவரி 28) முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யபட்டு கண்ணம்மா பேட்டை சந்திப்பு மற்றும் தெற்கு மேற்கு போக்கு சாலை மூப்பராயன் இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.
உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்லும் பேருந்துகள் மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை நந்தனம் வழியாக திருப்பி விடப்படும்.
அரங்கநாதன் சுரங்க பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகங்கள் தடை செய்யப்பட்டு மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணா சாலையை அடையலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
முதல் டி20: 176 ரன்கள் குவித்த நியூசிலாந்து… நெருக்கடியில் இந்தியா
பிறந்தநாளன்று டிக்டாக் பிரபலம் தற்கொலை!