தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட சில பகுதிகளில் நேற்று இரவுமுதல் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “ இன்று அதிகாலை பெய்தது போல், இன்று இரவு அல்லது நாலை அதிகாலை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வெயில் எப்போதும் போல அதிகமாக இருக்கும், குறிப்பாக மதுரையில்.” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
இதனால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்று முதல் செப்டம்பர் 27 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று முதல் செப்டம்பர் 25 வரை, தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பாலசந்தர் குறித்து சர்ச்சைப் பேச்சு… சுசித்ராவுக்கு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம்!
தோனியின் சாதனையைச் சமன் செய்த ரிஷப் பந்த்