புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் : பயணிகள் மகிழ்ச்சி!

தமிழகம்

சென்னையில் இன்று (ஜூலை 23) பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று முதல் பகல் நேர புறநகர் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

2024   ஜூலை 23  முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் –  செங்கல்பட்டு இடையே மேலே குறிப்பிட்ட நாட்களில் 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சோயா பீன்ஸ் இட்லி

மீண்டும் அதே அல்வாவை கிண்டிருவாங்களோ? அப்டேட் குமாரு

ஆம்ஸ்ட்ராங் கொலை…ரவுடியின் வங்கி கணக்கு ஆய்வு!

நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0