பரங்கிமலையில் ரயில் முன் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அக்டோபர் 13-ஆம் தேதி ஒரு தலைக்காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையம் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் ரயில்வே போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கானது, சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குறித்து சம்பவம் நடந்ததை நேரில் பார்த்தவர்கள், சத்யப்பிரியா குடும்பத்தினர், சதீஷ் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
சத்தியப்பிரியாவை கொலை செய்த சதீஷை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
அப்போது சத்யப்பிரியாவை கொல்ல 10 நாட்கள் பின்தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக, பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
இந்தநிலையில், சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, சிபிசிஐடி பரிந்துரை செய்தது.
சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில், சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி சதீஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செம்பரம்பாக்கம்: நீர் திறப்பு அதிகரிப்பு!
ஆர்.எஸ்.எஸ் பேரணியில் திடீர் மாற்றம்!