மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று (செப்டம்பர் 7) வெளியான நிலையில் தோல்வியடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாணவி முதலிடம்
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு (செப்டம்பர் 7) வெளியிடப்பட்டது. 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்தார்.
மேலும் டெல்லி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரும் 715 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 30-வது இடத்தையும், மாணவி ஹரிணி 43-வது இடத்தையும் பெற்றனர்.
தேர்ச்சி விகிதம் குறைவு
கடந்த ஆண்டைக் காட்டிலும் நீட் தேர்வை அதிகம் பேர் எழுதியிருந்தாலும் இந்தமுறை தேர்ச்சி பெற்றவர்கள் பாதியாகவே உள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா, நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளை மீட்ட பெற்றோர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சென்னை மாணவி தற்கொலை
நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்து உள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத நிலையை உருவாக்கும் என்பதால் நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதற்கு விலக்குக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணமே நீட்டுக்கு எதிரான முதல் மரணமாக இருந்தது. அதன்பிறகு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன.
ஒருபக்கம் மாணவர்கள் தற்கொலை நடந்த வண்ணம் உள்ளன. இது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
நீட்: தேர்வுக்கு முன்பே தற்கொலை: அன்புமணி எச்சரிக்கை!
67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனரே, உங்களோட சுயலாபத்துக்காக மாணவியின் தற்கொலையை அரசியல் ஆக்காதீர்கள். 10, +12 மாணவ மாணவிகள் கூடத்தான் தற்கொலை செய்கிறார்கள், உடனே 10 மற்றும் +12 பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாமா.