சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தென்னிந்தியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், இன்று முதல் முழு வீச்சில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே நேற்று சென்னையை நோக்கி மழை மேகக் கூட்டங்கள் படையெடுத்து வரும் செயற்கைக்கோள் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, திருவான்மியூர், அடையார், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, சென்ட்ரல், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சாலைகளில் குப்பை கொட்டும் கடைகளுக்கு ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி