சொந்த ஊர் போறீங்களா? – சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published On:

| By Selvam

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று (ஏப்ரல் 6) 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல் 5) சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 265 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி,  சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 350 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப வசதியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு பேருந்துகளில் www.tnstc என்ற இணையதளம் மற்றும் TNSTC என்ற செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

”ஒரு மனுஷன் பொய் பேசலாம்… ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது” : எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share