கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ கலைச்செல்வியை மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ-ஆக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி. இவர் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி போலீஸ் விசாரணையின் போது தப்பியோட முயன்ற ரவுடி ரோகித் ராஜை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
இதனையடுத்து அவரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டினார். மேலும், தைரியத்துடன் ரவுடியை சுட்டுப்பிடித்த கலைச்செல்வியை பொதுமக்களும் பாராட்டினர்.
இந்தநிலையில், டி.பி.சத்திரம் பகுதியில் மதுபோதையில் பெண் ஒருவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 15) இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றிருக்கிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ. கலைச்செல்வி சென்று விசாரித்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த பெண், கலைச்செல்வியின் முடியைப் பிடித்து இழுத்ததாகவும், அவரை கீழே தள்ளிவிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து இந்த தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ கலைச்செல்வி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்திய பெண் நேபாளத்தைச் சேர்ந்த சீதா என்பது தெரியவந்துள்ளது. டி.பி.சத்திரம் போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்கா சென்றாலும் கவனித்துக்கொண்டே இருப்பேன்: மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் மெசேஜ்!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!