மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று (டிசம்பர் 11) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒருவாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட சீரமைப்புகளை சரிசெய்வதற்காக ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் நலன் கருதி இன்று துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், செங்கல்பட்டு – பரனூர் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செங்கல்பட்டு: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!