சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா ஜனவரி 13 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. Chennai Sangamam 2024
அதைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
‘2023-2024-ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின்போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா ஜனவரி13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.
18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.பெருநகர சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளியிடப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னையில் ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை நடத்தப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: மொறு மொறு ஸ்வாலி
ஓடுபாதையில் தீப்பற்றி எரிந்த விமானம்: 379 பயணிகளின் நிலை என்ன?
நிவின் பாலி வயது 8,822… அசர வைக்கும் “ஏழு கடல் ஏழு மலை” வீடியோ!
லட்சத்தீவில் மோடி : பாதுகாப்பு பணியில் தமிழக போலீஸ்!
Chennai Sangamam 2024