சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை!

தமிழகம்

மாண்டஸ் புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நேற்று (டிசம்பர் 10) நள்ளிரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது.

நேற்று (டிசம்பர் 10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து உள் மாவட்டங்களில் நகர்ந்து கொண்டிருந்தது.

இதனால் புயல் கரையைக் கடந்திருந்தாலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

தொடர்ந்து நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததுள்ளது.

மேலும், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வந்த மழை நேற்று மாலை 5 மணியளவில் குறைந்திருந்தது. சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தாம்பரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வருகிறது.

12 மாவட்டங்களில் கனமழை

இன்று (டிசம்பர் 11) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *