மழைநீர் வடிகால் பணி : அக்.10-க்குள் நிறைவடையும் – சென்னை மேயர்!

Published On:

| By Minnambalam

சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும்  இன்னும் 5 சதவிகிதப் பணிகள் மட்டுமே இருக்கிறது.

அதுவும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயர் பிரியா, “மழைநீர் வடிகால் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாகப் பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.

இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை 35 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பாதிக்கப்பட்டதோ, அந்த இடங்களைத் தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவிகிதப் பணிகள் மட்டுமே இருக்கிறது.

அதுவும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும். வெள்ளத் தடுப்பு பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலத்துக்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம்.

மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

-ராஜ்

தேசத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது விளையாட்டு: மோடி

குரூப் 2, குரூப் 4 ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share