அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!

தமிழகம்

அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி எப்போது வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.

இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் 12 ஆம் தேதி (இன்று) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,

திருவாரூர், நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.” என்று தெரிவித்து இருந்தது.

வெதர்மேன் அறிக்கை!

”அடுத்த 2 நாளுக்கு தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு!” – எச்சரிக்கும் வெதர்மேன்

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ”கடைசியில் தென்சென்னை, வடசென்னையில் பெய்த மழை, தற்போது நகருக்குள் நகர்கிறது.

அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 78 மி.மீ மழை பெய்துள்ளது. மேற்கு பகுதியில் ஆவடி வரையிலும், அடையாறு, பெருங்குடி, மடிப்பாக்கம், கிண்டி, சைதைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

chennai rain today in weatherman report

சென்னையில் கனமழை!

சென்னையை ஒட்டிய கடல் பகுதியில் மேலும் மேகங்கள் உருவாகி வருவதால் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் தீவிர அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் 100 மி.மீ மழை பெய்யக்கூடும்.

கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் முட்டுக்காடு ஆகிய ஈசிஆர் பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.

அதே வேளையில் இன்று சென்னையில் சில இடங்களில் வெயில் உச்சம் பெறும் மற்றும் ஆங்காங்கே திடீரென மழை பெய்யும். நாளையும் இந்த நிலையே நீடிக்கும்.

chennai rain today in weatherman report

சீர்காழியில் 436 மி.மீ மழை!

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேக மூட்டத்தால் ஏற்பட்ட தீவிரம் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்துள்ளது.

சீர்காழியில் இன்று வரை கடந்த 24 மணி நேரத்தில் 436 மி. மீ மழை பதிவாகி உள்ளது. இதன்மூலம் நேற்று பெய்த 111 மி. மீ. மழையையும் சேர்த்து சுமார் 550 மி. மீ மழை பெய்துள்ளது.

பெரம்பலூர், விழுப்புரம், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் இரவு பகலாக நல்ல மழை பெய்துள்ளது.

அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

வரும் நவம்பர் 19, 20 க்குள் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி வரும்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!

இளமை இதோ இதோ : அழகிகளுடன் ‘ஆண்டவர்’!

+1
4
+1
17
+1
4
+1
35
+1
16
+1
19
+1
12

5 thoughts on “அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!

  1. என்னடா கேள்வி இது.நீ தஞ்சாவூர்லதான்கீறியா.

  2. ஏண்டா வெதர் மேன் பெயரை லெதர் மேன் என மாத்தரீங்க.

  3. சித்திரை முதல் புரட்டாசி ஆறுமாதங்கள் செங்குத்தான சூரிய வட்டப்பாதையில் பூமி சூரியனுக்கு நேர் மேலே செல்லும். சித்திரை முதல் ஆனி வரை 90 டிகிரி பூமிக்கு கீழே உள்ள சூரியனது வெப்பம் மேல் நோக்கி பாய்வதால் பூமிக்கு கோடை காலம். ஆடி ஆவணி புரட்டாசி 90 டிகிரி செங்குத்து வெப்பத்திலிருந்து பூமி சாய்வாக இறங்குவதால் வெப்பம் குறைந்து காற்றடிக்கும் காலமாக மாறுகிறது. ஆக சூர்ய வட்டப்பாதையின் 180 டிகிரியை தாண்டி ஐப்பசி கார்த்திகை மார்கழி மூன்று மாதங்கள் பூமி மேகங்கள் சூழ்ந்த பகுதிக்குள் பிரவேசிக்கிறது. முன் மூன்று மாதங்கள் திரண்ட காற்றின் கட்டுக்குள் மேகங்கள் சிக்குவதால் புயலும் மழையும் பூமியை தாக்குகிறது. இந்த ஆண்டு கோடை வெப்பம் அவ்வளவாக அதிகமில்லை. அதனால் இனி மழை பெய்யும் வாய்ப்பு படிப்படியாக
    குறையும்.இதெல்லாம் weather manuக்கு தெரியாது.

  4. சித்திரை முதல் புரட்டாசி ஆறுமாதங்கள் செங்குத்தான சூரிய வட்டப்பாதையில் பூமி சூரியனுக்கு நேர் மேலே செல்லும். சித்திரை முதல் ஆனி வரை 90 டிகிரி பூமிக்கு கீழே உள்ள சூரியனது வெப்பம் மேல் நோக்கி பாய்வதால் பூமிக்கு கோடை காலம். ஆடி ஆவணி புரட்டாசி 90 டிகிரி செங்குத்து வெப்பத்திலிருந்து பூமி சாய்வாக இறங்குவதால் வெப்பம் குறைந்து காற்றடிக்கும் காலமாக மாறுகிறது. ஆக சூர்ய வட்டப்பாதையின் 180 டிகிரியை தாண்டி ஐப்பசி கார்த்திகை மார்கழி மூன்று மாதங்கள் பூமி மேகங்கள் சூழ்ந்த பகுதிக்குள் பிரவேசிக்கிறது. முன் மூன்று மாதங்கள் திரண்ட காற்றின் கட்டுக்குள் மேகங்கள் சிக்குவதால் புயலும் மழையும் பூமியை தாக்குகிறது. இந்த ஆண்டு கோடை வெப்பம் அவ்வளவாக அதிகமில்லை. அதனால் இனி மழை பெய்யும் வாய்ப்பு படிப்படியாக
    குறையும்.இதெல்லாம் லெதர் பேருக்கு தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *