சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

Published On:

| By Monisha

chennai rain today imd chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மே 1) மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கோடைக் காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சற்று வெப்பம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 1) சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மடிப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்கள்,

மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மோனிஷா

12 மணி நேர மசோதா வாபஸ்: சிஐடியு வரவேற்பு!

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதல்வர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share