சென்னை ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று நீதிபதி டீக்காராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை ரேஸ் கிளப்க்கு குத்தகைக்கு விடப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துக் கொண்டதா? நிலம் தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு ஆவண ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு வருவாய் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், குத்தகையை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், பின் சம்பந்தப்பட்ட தாசில்தார் நிலத்தை தோட்டக்கலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, திருத்தியமைக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, விதிமீறல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கிளப்–பில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ரேஸ் கிளப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நிலம் இன்னும் ரேஸ் கிளப் வசம் தான் இருப்பதாகவும், ஆயிரம் பணியாளர்கள் இன்னும் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் வாதம் தவறானது எனவும் தெரிவித்தார்.
இருதரப்பின் வாதம் நிறைவடையாததால் விசாரணை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, நிலமும் சுவாதீனமும் எடுக்கப்பட்டு விட்டதால் உடனடியாக நிவாரணம் கோர முடியாது. பல தகவல்களை மறைத்து நிவாரணம் கோருவதாகவும், இந்த இடத்தில் பசுமைப் பூங்கா அமைத்தால், அது சென்னை மக்களுக்கு மிகப்பெரும் நன்மையாக இருக்கும் என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து ரேஸ் கிளப் தரப்பில், குத்தகை காலம் முடிந்தாலும், முறையான நோட்டீஸ் அளிக்கப்படாமல் காலி செய்ய வலியுறுத்த கூடாது என வாதம் முன்வைப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி டீக்காராமன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
96 இயக்குநர் பிரேம்குமார் ஒரு சாடிஸ்ட் : தேவதர்ஷினி சொல்லும் காரணம்!
6 வயது சிறுமியை நம்பி காரில் அனுப்பிய தாய்… தலைமை ஆசிரியர் உருவில் இருந்த கயவன்!