சென்னை மாநகராட்சி சொத்து வரியை 6 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தீர்மானம் இன்று(செப்டம்பர் 27) நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சிக்குள் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி அமைப்புகள் அடங்கும். அதே போல், ஊரக உள்ளாட்சிக்குள் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் அடங்கும்.
ஒரு மாநில அரசாங்கம் அதன் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கும். ஆனாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் வரி வருவாயும் மிக முக்கியம்.
சொத்து வரி, வீட்டு வரி, சுங்கவரி, தொழில் வரி போன்றவை உள்ளாட்சி வரிகளில் அடங்கும். இந்த வரிகள் அவ்வப்போது உள்ளாட்சி சட்டங்களுக்கு உட்பட்டு உயர்த்தப்படும்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2022ஆம் வருடம் சொத்துவரி உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக இயக்குநர்களுக்குச் சொத்துவரியை உயர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இன்று மேயர் ப்ரியா தலைமையில் கூடிய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்துவரியை 6 சதவீதம் வரை உயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2022ஆண்டு, சென்னை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்
மோடிக்கு பரிசளித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின்
மனு பாக்கர் துப்பாக்கியின் விலை ஒரு கோடியா? – ஆச்சரியத் தகவல்!