போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெங்களூரு போலீசிடம் குறை சொன்ன சென்னை இளைஞருக்கு பதிலளிக்கும் விதமாக புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.
பெங்களூரு நகரில் விதிகளை மீறி வாகன பதிவு பிளேட்டுகள் பொருத்தி இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை மேற்கு துணை ஆணையர் குல்தீப் குமார் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
அதில், பதிலளித்திருந்த சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் இதுபோன்று நிறைய வாகனங்கள் செல்வதாகவும் சென்னை காவல்துறை ஹெல்மட் தொடர்பான வழக்குகளை பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், இது போன்ற விதிமீறல்களுக்கு சென்னை போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை என பெங்களூரு போலீசாரிடம் குறை கூறி பதிவிட்டிருந்தார்.
இதற்கு சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். சென்னையில் இந்த ஆண்டு விதிமீறல் வாகனப்பதிவு பிளேட்டுகள் பொருத்தியது தொடர்பாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வாகன ஓட்டிகளுக்கு 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
2 வீரர்களுக்காக பெரும் தொகையை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பொங்கல் பரிசில் கரும்பில்லை: விவசாயிகள் பூச்சி மருந்துடன் போராட்டம்!