ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு : சென்னையில் மீண்டும் போலீஸ் ரெய்டு!

தமிழகம்

சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் தமிழக காவல்துறையினர் இன்று (நவம்பர் 15) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்தியா முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.

அதன்படி தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் மட்டும் 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம், சென்னையில் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மண்ணடி உள்ளிட்ட 5 பகுதிகளில் தமிழக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

2 நாட்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு குறிப்புகளை எடுத்துச் சென்றதற்காக ஒரு நபரை சென்னை காவல்துறை கைது செய்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று மீண்டும் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சென்னை மாநகர காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

மண்ணடி பகுதியில் ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெறுகிறது.

என்.ஐ.ஏ சோதனை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா காலமானார்!

காலாவதியான தடுப்பூசிகள் : தமிழக அரசு எடுத்த முடிவு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *