நோ எண்ட்ரி : 1300 பேர் மீது வழக்குப்பதிவு – போலீஸ் எச்சரிக்கை!!

தமிழகம்

சென்னையில் நேற்று (செப்டம்பர் 5) ஒரே நாளில் நோ எண்ட்ரியில் வாகனம் ஓட்டியதற்காக 1300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் வாகனங்கள் என்பது மக்களின் அத்தியாவசியமான ஒரு பொருளாகவே மாறிவிட்டது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்கும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

chennai police files case

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, நோ எண்ட்ரி மற்றும் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டுவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை முழுவதும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நோ எண்ட்ரியில் சென்றதாக 1,300 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நோ எண்ட்ரியில் செல்பவர்களிடமிருந்து வழக்கமாக ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக ஆபத்தை விளைவிக்கும் பயணத்துக்கு ரூ. 1000 அபராதம் மற்றும் நோ எண்ட்ரி அபராதம் ரூ. 100 சேர்த்து 1,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

மோனிஷா

போக்குவரத்து விதிமீறல்: போன் போட்டு பண வசூல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *