சிற்பி திட்டம்: மாணவர்களுக்கு யோகா வகுப்பு!

தமிழகம்

சிற்பி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்கள் இன்று (ஜனவரி 7) யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறார் குற்றங்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒவ்வொரு பள்ளிகளிலும் இருந்து 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

chennai police conduct yoga classes for school students

அந்தவகையில், இன்று சிற்பி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சியானது சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வழங்கப்பட்டது.

இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு சீருடை வழங்கப்பட்டது. யோகா பயிற்சிக்கு பின்னர் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை பெருநகர மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

செல்வம்

டெல்லி விமான நிலையம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *