சென்னை போலீசாருக்கு ரேட்டிங் : இரண்டுக்கு குறைந்தால் ட்ரான்ஸ்பர்?

தமிழகம்

சென்னை போலீசாருக்கு ரேட்டிங் முறை கொண்டு வரப்படவுள்ளது.

சென்னையின் 110ஆவது காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை 7ஆம் தேதி பொறுப்பேற்றார். அப்போது ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவர் சென்னை ஆணையராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையில் ரேட்டிங் முறையை காவல் ஆணையர் அருண் கொண்டு வந்துள்ளார்.

சென்னை நகரில் 104 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையமும் ஒரு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர், அவரோடு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த அதிகாரிகள் இப்போது பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்று சென்னை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது பொதுமக்களுக்கு போலீசார் பதிலளிக்கும் விதம், வழக்கைத் தீர்க்கும் திறன், தண்டனை விகிதம் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளைக் கையாள்வது ஆகியவற்றின் அடிப்படையில் ரேட்டிங் வழங்கப்படும்.

இன்ஸ்பெக்டர்கள் தங்கள் செயல்பாட்டுக்காக 0-5 ரேட்டிங் வரை பெறுவார்கள். உதவி, துணை ஆணையர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், இந்த மதிப்பீடுகளை கண்காணித்து அதை ஆணையரிடம் வழங்குவார்கள்.

இதில் இரண்டு ரேட்டிங்கிற்கும் குறைவாக உள்ள அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று சென்னை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உதவி ஆணையர் பதவிக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சென்னை காவல் அணையர் அருண், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, மாநகரில் பணிபுரியும் போலீசார் குறித்த விவரங்களை சேகரிக்கவும் கூறியுள்ளார்.

இதேபோன்ற ரேட்டிங் முறையை முன்பு முன்னாள் போலீஸ் ஆணையர் லத்திகா சரண் மற்றும் கூடுதல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கித்  ஆகியோர் போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தினர். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ரொக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

70,403 பொறியியல் இடங்கள் காலி : துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணியாக இருந்த போது , வயிற்றில் எட்டி உதைத்தார்- நடிகர் முகேஷின் கொடுமைகள் – நடிகை சரிதா கண்ணீர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *