சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள் இனி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் வரை செல்ல முடியும் என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓலா, ரேபிடோ, ஊபருக்கு போட்டியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் ‘நம்ம யாத்ரி’ என்ற புதிய ஆன்லைன் ஆட்டோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (ஜனவரி 29) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் நம்ம யாத்ரி செயலியை அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர் விழாவில் சண்முகசுந்தரம் பேசுகையில், “சி.எம்.டி.ஏ.வின் எல்லை வரையறை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை சி.எம்.டி ஏ. இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள் சென்று வர முடியும். அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து எல்லை தாண்டியதாக இனி ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கமாட்டார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேடிய ED : 30 மணி நேரம் கழித்து திரும்பிய முதல்வர்!
கார்த்தி27: டாப் வில்லனை ‘லாக்’ செய்த படக்குழு
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஏன்?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!