சென்னையில் இன்று (டிசம்பர் 15) அதிகாலையில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பழவந்தாங்கலில் காந்திமணி, ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கு சொந்தமான கார்கள் அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை 5 மணியளவில் இரண்டு கார்களும் மள மளவென தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடனடியாக இதுகுறித்து கிண்டி மற்றும் திருவான்மியூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
கார் தீப்பற்றி எரிந்தது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காந்திமணி, ராஜேஷ்குமார் ஆகியோரது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
செல்வம்
உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷ்யா: முக்கிய நிர்வாகக் கட்டடங்கள் சேதம்!