திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (மார்ச் 17) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் கட்டுவதற்காக நடிகை காஞ்சனா குடும்பத்தினர் தி. நகரில் ரூ.40 கோடி மதிப்பிலான 14,880 சதுர அடி காலி இடத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக கொடுத்தனர்.
இந்த இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி நகர் ஜி.என்.செட்டி சாலையில் ரூ.15 கோடி செலவில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெறுவதால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.
காலை 10 மணிக்கு பத்மாவதி , ஸ்ரீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானமும், 15 ஆயிரம் திருப்பதி லட்டும் வழங்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, தமிழ்நாடு புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செல்வம்
திரவுபதி முர்மு வருகை: குமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
வன்முறை பேச்சு: உதயகுமார் மீது திமுக புகார்!