சென்னையில் மீண்டும் மினி பஸ்… போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு!

தமிழகம்

தமிழகத்தின் பிற பகுதிகளில் மினி பஸ்களை 25 கி.மீ இயக்கினாலும், சென்னையில் 6 முதல் 8 கி.மீ மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று (ஜூலை 22) தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான மினி பஸ் திட்டம் 2024 என்ற பெயரில் புதிய வரைவு அறிக்கை திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தநிலையில், மினி பஸ்களை இயக்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், சிற்றுந்து உரிமையாளர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், “சென்னையில் மினி பஸ்களை இயக்கினால் அவற்றை மாநகர போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயக்க வேண்டும்.

இங்குள்ள 8 மண்டலங்களில் 1,700 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் மினி பஸ்களை 25 கி.மீ இயக்கினாலும், சென்னையில் 6 முதல் 8 கி.மீ மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை…ரவுடியின் வங்கி கணக்கு ஆய்வு!

நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *