சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் புகார் எண்களை அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில், சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை குடிநீர் வாரியம் புகார் எண்களை அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி மக்கள் ‘சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம்’ தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567 என்ற எண்ணிற்கும் 1916 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
கனமழை : சென்னை விமான சேவையில் பாதிப்பு!
ஓடும் ரயிலில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!