சென்னை மெட்ரோ ரயிலுக்கு 70 டிரைவர் இல்லாத ரயில்கள் தயாரித்து வழங்கப்படவுள்ளன.
சென்னை நகரை பூமிக்கு அடியில் இணைக்கும் வகையில் மேலும் 3 மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீக்கும் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவுக்கும் மாதரவம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீக்கும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தடத்தில் இயக்க 70 டிரைவர் இல்லாத ரயில்கள் தயாரிக்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பி.இ.எம்.எல் நிறுவனம் கோச்சுகளை தயாரித்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியிலுள்ள ஆல்ஸ்டாம் நிறுவனத்திடம் வழங்கும். அங்கு, டிரைவர் இல்லாத ரயில் உருவாக்கப்படும். முதல் கட்டமாக ஒரே ஒரு டிரைவர் இல்லாத ரயில் சென்னை மெட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பூந்தமல்லி யார்டில் பயிற்சி எடுத்து வருகிறது.
இந்த ரயில்களில் டிரைவர் இல்லையென்றாலும் மெட்ரோ ரயில் பணியாளர்கள் இருப்பார்கள். பயணிகள் குறைகள் இருந்தால் அவர்களிடத்தில் தெரிவிக்கலாம். 3 கோச்சுகள் கொண்ட இந்த ரயிலில் ஆயிரம் பேர் பயணிக்க முடியும். அடுத்த கட்டமாக 36 ரயில்கள் சென்னை மெட்ரோவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதிவேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. எனவே, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி பூமிக்கு அடியில் சென்னை நகரை முழுமையாக இணைக்கும் வகையில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி என்றனர்… நயன்தாராவுடன் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன்
தலித் ஏழுமலை மருமகன் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை!