தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ சேவை சரி செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சென்னை கோயம்பேடு வழியாகச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.
அதுபோன்று மற்ற வழித் தடங்களில் இயக்கும் மெட்ரோ ரயில்கள் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மெட்ரோ நிர்வாகம் மீண்டும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாகச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப வல்லுநர்களால் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
ஈரோடு தேர்தல்: ஓபிஎஸ் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார் யார்?
முத்துச்சாமி தலைமையில் தேர்தல் பணி: ஈரோட்டில் திமுக பிரச்சாரம்!