மெட்ரோ: வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகம்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் இங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.

இவ்வாறு வாகனம் நிற்கும் இடத்தில் சிலர் ஜோடியாக வாகனத்தில் வந்து வாகனம் நிறுத்துவதற்கு கட்டணத்தை செலுத்திவிட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பதும், சிலர் வாகனங்களில் உள்ளே இருந்துகொண்டே புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் எனப் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்தன.

இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் உருவானது. இதனால் ஊழியர்களுக்கும் வாகனம் நிறுத்துபவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

கட்டணம்தான் செலுத்தி விட்டோமே நாங்கள் என்ன செய்தாலும் தட்டிக்கேட்க நீங்கள் யார் என தகராறு அடிக்கடி நடக்கிறது.

இதை தடுக்காவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று பலரும் எச்சரித்தனர்.

இவ்வாறு பல புகார்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளுக்கு செல்லவே அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்று விட உத்தரவிடப்பட்டது.

Chennai Metro New Rules

வாகனத்தில் அமர்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதை அனைத்து மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலிலும் வைத்துள்ளனர்.

மேலும் வருகின்ற ஏப்ரல் 19 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகிற ஏப்ரல் 19 முதல்,

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் பயணிகள் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் டாப் அப் (Topup) செய்து கொள்ளலாம்.

வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் பயண அட்டைகளுடன் மட்டுமே கிடைக்கும்.

வருகின்ற ஏப்ரல் 19 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால்,

அனைத்துப் பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா: இழுபறிக்குப் பின் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!

கிச்சன் கீர்த்தனா: ஆரஞ்சு ஸ்குவாஷ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *