Chennai Metro நிலையங்களில் வரப்போகும் சூப்பர் வசதி!

Published On:

| By Minnambalam Login1

latest update about Chennai metro

சென்னையில் உள்ள நேரு பூங்கா, அரும்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. latest update about Chennai metro

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடமிருந்து வரும் கட்டண வசூல் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்,

”மெட்ரோ ரயில்களில் பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுபோன்ற திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

முதற்கட்டமாக நேரு பூங்கா, அரும்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களை, தனியார் பங்களிப்போடு வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்க இருக்கிறோம்.

chennai metro railways

சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தரைத்தளத்துடன், இரண்டு மாடி வணிக வளாகம் ரூபாய் 38.70 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தனியார் நிறுவனமும் 12 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது டெண்டர் வெளியிட்டு, தனியார் நிறுவனத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்த வளாகம் அமைக்கும் பணியினை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.

இதன்வாயிலாக மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூபாய் 100 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.

வரும் ஆண்டுகளில் வருவாயை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

எனவே, அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்த வளாகம் அமைக்கும் பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.

இதன்வாயிலாக மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் .

chennai metro stations

கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூபாய் 100 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் வருவாயை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்”, என்றனர்.

வணிக வளாகங்கள் வரும் பட்சத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

அதோடு ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ஷாப்பிங் செய்யலாம் என்பதால் குடும்பத்தினர், கல்லூரி மாணவர்கள் குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரசிக பிரியா மாணவ நிருபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“தமிழ்நாட்டுக்கு மோடி வெறும் கையால் முழம் போடுகிறார்” : ஸ்டாலின்

Nayanthara கனடாவில் கடை திறந்த நயன்தாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share