சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
சென்னையின் நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் மெட்ரோ ரயிலின் டிக்கெட் விலை அதிகமாக தெரிந்தாலும், தற்போது பயணிகள் அதிகளவில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி பயணங்கள் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.
குறிப்பாக சரியான நேரத்திற்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் முதல் சாய்ஸ் மெட்ரோ ரயிலாகவே உள்ளது. பெண்களுக்கு தனி கம்பார்ட்மெண்ட், ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பது, பாதுகாப்பு, குளிர்சாதன வசதி என பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களும் மெட்ரோ ரயிலில் உள்ளன.
இந்தநிலையில் சென்னை மெட்ரோ நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் மட்டும் சுமார் 86.15 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக கடந்த பிப்ரவரி 9-ம் தேதி மட்டும் சுமார் 3.26 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை, வெயில் ஆகிய காரணங்களினால் வரும் மாதங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கவின் மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா!