கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடையில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 58 சதவிகிதம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியில் இருந்து நேற்று காலை முதல் உபரிநீர் விநாடிக்கு 200 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 2173 மில்லியன் கன அடியாக உள்ளது. இதையடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 159 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், “தற்போது புழல் ஏரியில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் கோடைக்காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சனை வராது’’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ராஜ்
அரிசிக்கொம்பன் வழக்கு : நீதிபதிகள் உத்தரவு!
‘எனக்கும் யாஷிகாவுக்கும் காதலா? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்!