ஆறு நாள்களுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னை கடற்கரை: என்ன காரணம்?

தமிழகம்

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசக் காட்சி நடைபெறவுள்ளதால், நாளை (அக்டோபர் 1-ம் தேதி )முதல் 6-ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விமானப்படை தின அணிவகுப்பு – 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச் செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS) / Drone மற்றும் எந்த விதமான பொருள்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாகசக் காட்சியில் , வானில் லாகவமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்ய கிரண் குழு, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகிய சாகசங்கள் நிகழ்த்தப்படவுள்ளன.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூன்றாவது மாதமாக உயர்ந்த சிலிண்டர் விலை!

கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்!

பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்துக்கு உதவும் ஃபேஸ் பேக்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *