சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (பிப்ரவரி 6) புதிதாக ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவியிடங்களுக்கு காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை பரிந்துரை செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொலீஜியத்திற்கு அனுப்பியிருந்தனர்.
இதனை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொலிஜியம் 9 பேரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதில் மதுரை உயர் நீதிமன்றத்தில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கக்கூடிய விக்டோரியா கெளரி, யூடியுபில் வெறுப்புணர்வை தூண்டக்கூடிய வகையில் பேசியதாக அவரை நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
செல்வம்