சென்னையில் தன் பாலின மற்றும் பால் புதுமையினர் நடத்திய வானவில் சுயமரியாதை பேரணி இன்று (ஜூன் 30) கோலாகலமாக நடைபெற்றது.
தன் பாலின மற்றும் பால் புதுமையின LGBTQIA+ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஜூன் மாதத்தை பிரைட் மாதமாக கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் உலகம் முழுவதும் LGBTQIA+ மக்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தில் அவர்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் பேரணி நடத்துவார்கள்.
அந்தவகையில், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானவில் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான LGBTQIA+ மக்கள் பங்கேற்றனர்.
வானவில் சுயமரியாதை பேரணியில் சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஒடியா என பல மொழிகளிலும் LGBTQIA+ சமூகத்தினருக்கு ஆதரவாக பதாகைகளை கையில் ஏந்தி ‘எங்கள் பாலினம், எங்கள் உரிமை… எனது உடல் எனது உரிமை’ என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும், இந்த பேரணியின் போது மேள, தாளம், ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரோஹித், கோலியை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு…. ரசிகர்கள் ஷாக்!
விக்கிரவாண்டி: திமுக Vs பாமக மோதல்… தேர்தல் அதிகாரியை மாற்ற அன்புமணி வலியுறுத்தல்!