கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் அமைய உள்ள புதிய ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் அமைய உள்ள புதிய ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஒரு மாதத்தில் டெண்டர் கோரப்பட்டு 4 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியையும் ரயில்வே நிர்வாகத்திற்கு, சி.எம்.டி.ஏ வழங்கியுள்ளது.
இந்த நிலையில் மூன்று நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதனால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் ஜிஎஸ்டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!
“நீண்ட ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன்”- பும்ரா நெகிழ்ச்சி!