சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர், அலுவலகத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் புவனேஷ்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த 27 வயதான இவர் தனது சம்பளம், சேமிப்பு உள்ளிட்ட மொத்த பணத்தையும் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் குறிப்பிட்ட நிறுவன ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்து வந்துள்ளார்.
போதாக்குறைக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கியும் ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டுள்ளார்.
இந்த நிலையில் அலுவலகக் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து இன்று (நவம்பர் 11) தற்கொலை செய்துள்ளார் புவனேஷ்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட துரைப்பாக்கம் காவல்நிலைய போலீசார், பங்குச்சந்தையில் புவனேஷ் சுமார் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த வேதனையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அலுவலகத்திற்கு சகஜமாக வந்து வேலை செய்து கொண்டிருந்த புவனேஷ் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ICC Worldcup: பேட்டிங் செய்யாமலே வெளியேறியது பாகிஸ்தான் அணி!
கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல்!