இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட வான்வெளி சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வான் சாகசத்தை கண்டு ரசித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமானப் படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் நினைவுப் பரிசு வழங்கினார்.
விமான சாகச நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது. இந்திய விமானப்படை வீரர்கள் நமது ஹீரோக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை மெரினாவின் பிரகாசமான நீல வானத்தில் இந்திய விமானப்படையின் கண்கவர் விமான காட்சியை அனுபவிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
வியப்பை ஏற்படுத்திய வான்வழி காட்சிகள், இவ்வளவு திறமையை அருகில் இருந்து பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.
வானத்தில் விமானம் உயரும் போது அனைவரும் ஆரவாரத்துடன் கூடிய சூழல் பிரம்மிப்பாக இருந்தது.
இந்நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றியமைத்த அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் கூறுகையில், “ சென்னை மெரினாவில் நடந்த வண்ணமயமான சாகசத்தை சுமார் 15 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
டெல்லி, சண்டிகர், பிரயாக்ராஜ் நகரங்களிலும் வான் கண்காட்சி நடந்திருக்கிறது. எனினும், நிகழ்ச்சியின் அளவிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் டாப்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்தம்பித்த சென்னை: “நிர்வாகம் கிலோ எவ்வளவு?” – ஜெயக்குமார் ஆவேசம்!
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை அப்டேட்!