ஜனவரி 3, 4-ம் தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் சென்னை ஐஐடி’ என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடி நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும். அந்த வகையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதி ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அரங்குகளையும் பொதுமக்கள் பார்க்கலாம். இந்தச் சிறப்பு திட்டத்தின்கீழ் ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் shaastra.org/open-house என்ற இணையதள இணைப்பில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்ச் சட்னி!
இந்தியாவில் பத்து பைசா கூட கொடுக்காமல் ரயிலில் போகலாம்? எங்கே?
ஆற்றில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: பாலம் அமைக்க வலியுறுத்தல்!