சென்னை ஐஐடி விடுதி அறையில், இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் இன்று (ஏப்ரல் 21) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேடர் சுரேஷ் என்ற மாணவர் சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இன்று ஐஐடி வளாகத்தில் காவிரி விடுதியில் உள்ள தனது அறையில் இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மதியம் 2.30 மணியளவில், விடுதி அறையை கேடர் சுரேஷின் நண்பர்கள் தட்டியிருக்கின்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர் அறை கதவைத் திறக்காததால் வார்டன் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர்.
அப்போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கேடர் சுரேஷ் எப்படி உயிரிழந்திருப்பார் என்று போலீசார் அவரது அறையில் ஆராய்ந்திருக்கின்றனர்.
அப்போது தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்ததாகவும், அதில் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக எழுதப்பட்டிருந்ததாகவும் கோட்டூபுர போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஒரு நல்ல மாணவரை இழந்துவிட்டதாகவும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அதே மார்ச் மாதம் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டில் அதாவது 4 மாதத்தில் மட்டும் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
பிரியா
“சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும்”: முதல்வர் ஸ்டாலின்