சென்னையில் கால் வலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் காலை அகற்றிய மருத்துவமனையின் அங்கீகாரம் இன்று (ஆகஸ்ட் 21) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பல நாட்களாகக் கால் வலி இருந்துள்ளது. அதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ‘மௌன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை சோதித்த மருத்துவர் சரவணன், சிறுவனின் ஒரு காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறாமல் சிறுவனின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், அறுவை சிகிச்சை சரியாகச் செய்யப்படாத காரணத்தால் அச்சிறுவனின் ஒரு காலை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அகற்றி விட்டனர்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், மருத்துவ பணிகளின் இயக்குநர் ராஜமூர்த்தி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த மருத்துவமனை உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது அம்பலமானது. மேலும், அங்கு போதிய மருந்துகள், அவசரக் கால மருத்துவர்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அனுமதி இல்லாமல் திருச்சி எஸ்.பி-க்கு விளக்க கடிதம்: நாம் தமிழர் நிர்வாகி நீக்கம்!
நாளை முதல் தவெக கொடி பறக்கும்… விஜய் அறிவிப்பு!
“வறுமையால் திறமை முடங்கிவிடக்கூடாது” : மாணவிக்கு உதவ முன்வந்த அமைச்சர்!