chennai highcourt orders tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று வழி என்ன? : அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

தாழ்தள பேருந்துகளை இயக்குவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 900 மி.மீ உயரத்தளத்துடன் கூடிய 1,107 நகரப் பேருந்துகள் உட்பட 1,771 பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கடந்த ஆண்டு டெண்டர் கோரப்பட்டது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி வரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமில்லாமல் முதியவர்களுக்காகவும் தாழ்தளப் பேருந்துகளை ஏன் கொள்முதல் செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

chennai highcourt orders tamilnadu

மேலும் 100 சதவீத பேருந்துகளையும் தாழ்தளப் பேருந்துகளாக இயக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் இதில் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதாகக் கூறினார்

இதனால் அந்த தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துக்கு துறை விளக்கம் கூறுகையில், 100 சதவீத பேருந்துகளைத் தாழ்தள பேருந்துகளாக வாங்குவது சாத்தியமில்லை.

தாழ்தள பேருந்துகள் இயங்குவதற்குச் சரியான சாலை வசதி தற்போது இல்லை. மழைக் காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் பேருந்திற்குள் புகுந்து விடும்.

அதுமட்டுமின்றி தாழ்தள பேருந்து வாங்குவதற்கு 80 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. ஆனால், சாதாரண பேருந்து வாங்குவதற்கு 40 முதல் 45 லட்ச ரூபாய் தான் செலவு ஆகிறது.

தாழ்தள பேருந்துகளை இயக்க 1 கிமீக்கு 41 ரூபாய் செலவு ஆகும். ஆனால், சாதாரண பேருந்தை இயக்குவதற்கு ஆகும் கட்டணம் குறைவு தான்.

இதனால் 100 சதவீதம் தாழ்தள பேருந்துகளை வாங்குவது சாத்தியமில்லை எனப் போக்குவரத்துத் துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நீதிபதிகள், பேருந்துகளில் பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சாய்தள வழி ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் மாற்று வழிகள் குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உத்தரவிடப்பட்டுள்ளது.

மோனிஷா

ஈரோடு கிழக்கு: எடப்பாடி போடும் கணக்கு!

கார் பேனட் மீது சிக்கிய நபர்: ஒரு கி.மீ. இழுத்துச் சென்ற பெண்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *