சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் குமரேஷ் பாபு. இவர் அதிமுக பொதுக்குழு வழக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் கிரா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று அவரது அறையில் கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து கிராவை மீட்டு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கிராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீதிபதி குமரேஷ் பாபுவின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கிரா தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!