ஆட்சியர்களுக்கு ED சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பு!

Published On:

| By christopher

Chennai high court order on ed case

ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை(நவம்பர் 28) உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. Chennai high court order on ed case

அரியலூர், கரூர், வேலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 17ஆம் தேதி அமலாக்கத்துறை மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்பியது.

மணல் குவாரிகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுள்ள அமலாக்கத்துறை, விசாரணையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க ஆதார் அட்டையுடன் வெவ்வேறு தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 24ஆம் தேதி தமிழக பொதுத்துறை செயலாளர் கே.நந்தகுமார் 5 ஒரே மாதிரியான ரிட் மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது.

மனு விசாரணைக்கு உகந்தது அல்ல!

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ”மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று வாதிட்டார்.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே,  “மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தான் ஆட்சியர்கள் வருகிறார்கள். எனவே மாநில அரசு மனுத்தாக்கல் செய்ததில் தவறில்லை.

கனிமவள சட்டம் அமலாக்கத்துறை அதிகாரத்தின் கீழ் வராது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளதா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

அதிகாரம் உள்ளது என்றால் பாஜக ஆளும் உத்தரபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை ஏன் அங்கு விசாரணை நடத்தவில்லை.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, தங்களால் ஆளப்படாத மாநிலங்களின் அதிகாரங்களைத் துன்புறுத்துவதற்கும், குறைப்பதற்கும், அபகரிப்பதற்கும் அமலாக்க இயக்குநரகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.

மணல் அள்ளுவதற்கு குத்தகைக்கு எடுக்கும் மாநில அரசின் அதிகாரத்தில் அமலாக்க இயக்குனரகம் மூலமாக மத்திய அரசு தலையிடுகிறது.

மாநில விவகாரங்களில் ED தலையிடுவதையும் அதன் அதிகாரிகளை விசாரணைக்கு வரவழைப்பதையும் PMLA அனுமதிக்காது.

யாரோ ஒருவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் மாநில அதிகாரிகளுக்கு  ED எப்படி சம்மன் அனுப்ப முடியும்? மத்திய அரசின் ஐடி அதிகாரிகளை மாநில அரசு விசாரித்தால் என்ன ஆகும்?

மேலும் மணல் மோசடிகளை தடுப்பதற்காகத்தான் அதிகாரிகள் உள்ளனர். அவர்களிடம் தங்களது விசாரணைக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாமே தவிர விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப முடியாது.

அமலாக்கத்துறையின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என்று துஷ்யந்த் தவே வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் நாளை தீர்ப்பு அளிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மிரள வைக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ போஸ்டர்!

IPL2024: கடைசி வரை நீடித்த போராட்டம்… தாய் கழகத்தில் இணைந்தார் ஹர்திக்

Chennai high court order on ed case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel