ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் சில விளக்கங்களை பெற வேண்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளது.
2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், பின்னர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.
அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய கோரி ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட் மீதான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என கூறி வழக்கை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் திடீரென இன்று, அந்த வழக்கை recall செய்த நீதிபதிகள், இவ்வழக்கில் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், 21ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அன்றைய தினம் இவ்வழக்கில் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நையாண்டி மேளம் முழங்க அதிர்ந்த திரையரங்கம்… ‘வாழை’ படத்துக்கு மாஸ் ரிசப்ஷன்!.
மோடிக்கு பிறகு யார்? ரேசில் முந்தும் அவர்!