சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 3-4 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 14) தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 11.6 செ.மீ, மழையும் சென்னயில் அண்ணா நகர் 9.9 செ.மீ, அம்பத்தூர் 9.8 செ.மீ, அடையாறு 9.1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
WI vs IND: தொடரை இழந்த இந்தியா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்து என்ன பலன்..வெள்ளம் தேங்குவதை அரசால் சரி செய்ய முடியாதா?