சென்னையில் விடிய விடிய மழை: அதிகபட்சமாக 7.4 செ.மீ பதிவு!

தமிழகம்

நேற்று இரவு முதல் சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. இதனால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி நகர், வட பழனி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எழும்பூர், எம்.ஆர்.சி நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கன மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 4.6 செ.மீ மழை பெய்துள்ளது.

கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 7.4 செ.மீ மழையும், அண்ணாநகர் மலர் காலனி மற்றும் அடையாறில் 5.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

இனி என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது: நளினி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0