சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத கனமழை சென்னையில் பெய்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக வேளச்சேரி, புழுதிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கே தவிக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் இருக்கின்றனர்.
https://twitter.com/suriyavpps/status/1732298443534848206
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தாம்பரம் விமான படையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அதிக வெள்ளம் சூழ்ந்துள்ள வேளச்சேரி, புழுதிவாக்கம், மேடவாக்கம், மணப்பாக்கம், மணலி, வடசென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ராணுவ ஹெலிகாப்டர்கள் வழியாக சுமார் 400 கிலோ வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
வட இந்தியாவும் தமிழ்நாடும்: சில வரலாற்றுக் குறிப்புகள்!
திமுக எம்.பி.,க்கு எதிராக பாஜகவினர் அமளி… காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?